வரும் நிதியாண்டு சிறப்பாக அமையும் : ப. சிதம்பரம்
Published on : 28th February 2013 06:02 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பொது பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று விளக்கம் அளித்தார்.
பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பட்ஜெட் தாக்கல் செய்த போது நேரம் குறைவாக இருந்ததால் போதிய விளக்கம் அளிக்க முடியவில்லை. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், மக்கள் மீது எந்தவொரு சுமையும் ஏற்றப்படவில்லை என்று கூறினார்.
மேலும், பட்ஜெட் தொடர்பாக புதிய கொள்கைகள் விரைவில் வெளியாகும். பட்ஜெட் மூலமாகவே நாட்டின் பொருளாதாரத்தை சீராக்கி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த நிதியாண்டு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி அதிகரித்தால் பற்றாக்குறை தானாகவே குறைந்து விடும். ஆனால் இறக்குமதியை உடனடியாகக் குறைக்க முடியாது. கட்டுப்படுத்தவே முடியும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நக்சலைட்டுகளை ஒடுக்கும் வகையில் காவல்துறையை நவீனப்படுத்தவும், பல்வேறு உள்நாட்டு விவகாரங்களை கவனிக்கும் வகையிலும் பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சிஆர்பிஎப் படைக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 10,818.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டை ஒட்பபிடும் போது 10 சதவீதம் கூடுதலாகும். மாநில காவல்துறையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு அளிக்கும் நிதியுதவியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.