சிவசேனைத் தலைவராக உத்தவ் பொறுப்பேற்பு: பெண்கள் பாதுகாப்புக்கு மடக்குக் கத்தி விநியோகம்!
By | Published On : 23rd January 2013 01:38 PM | Last Updated : 23rd January 2013 01:38 PM | அ+அ அ- |

சிவசேனைக் கட்சியின் தலைவராக உத்தவ் தாக்கரே இன்று காலை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று சிவசேனை நிறுவுனர் தலைவரும், உத்தவ் தாக்கரேயின் தந்தையுமான பால் தாக்கரேயின் பிறந்த நாள் என்பதால், இன்றைய தினத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பை சிவசேனா பவனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பால் தக்கரே பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிவசேனைக் கட்சிக் காரர்கள் பெண்களின் பாதுகாப்புக்காக அவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள உதவும் வகையில், சீன நாட்டுத் தயாரிப்பான மடக்குக் கத்திகளை பெண்களுக்கு விநியோகம் செய்தனர்.
பெண்கள் தங்கள் கைப்பைகளில் லிப்ஸ்டிக்கை வைத்துக் கொள்வதைக் காட்டிலும் கத்தியை வைத்துக் கொள்ள வேண்டும் என்று பால் தாக்கரே கூறியிருந்ததை சிவசேனைக் கட்சியின் தென் மண்டலத் தலைவர் அஜய் சவுத்ரி கூறினார். அதனாலேயே இந்த விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.