அத்வானி பாதையில் குண்டு வைத்தவர் மீது கொலை முயற்சி வழக்கு
By dn | Published On : 09th July 2013 10:12 AM | Last Updated : 09th July 2013 10:12 AM | அ+அ அ- |

மதுரையில் அத்வானி யாத்திரை பாதையில் குண்டு வைத்த வழக்கில் கைதானவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அலும்பட்டி பாலத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அத்வானி யாத்திரை மேற்கொண்ட போது அவரை கொல்லும் திட்டத்துடன் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குண்டு வைத்த ஹனீபா என்பவரை வத்தலகுண்டுவில் நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.
வத்தலகுண்டில் ஹனிபாவை கைது செய்ய முயன்ற போது, போலிஸ் டிஎஸ்பியை ஆயுதங்களைக் கொண்டு தாக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.