காக்பிட் பகுதியில் நடிகையை அனுமதித்த விமானிகள் சஸ்பென்ட்
By dn | Published On : 19th July 2013 09:55 AM | Last Updated : 19th July 2013 09:55 AM | அ+அ அ- |

விமானத்தின் காக்பிட் பகுதியில் நடிகையை அனுமதித்த விவகாரத்தில் விமான ஓட்டிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்ற ஏர் இந்திய விமானத்தில் பயணித்த நடிகை ஒருவரை, விமான பைலட்டுகள், விமானத்தை இயக்கும் காக்பிட் பகுதிக்குள் அமர வைத்துள்ளனர்.
இது குறித்து பயணி ஒருவர் அளித்த புகாரின் பேரில், அந்த பைலட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.