சத்துணவு விவகாரம் : மத்திய அரசின் எச்சரிக்கையை மறுத்துள்ள பிகார்
By dn | Published On : 19th July 2013 10:26 AM | Last Updated : 19th July 2013 10:26 AM | அ+அ அ- |

பிகாரில் சத்துணவு சாப்பிட்டு 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வந்த தகவல்களை பிகார் அரசு மறுத்துள்ளது.
பிகார் மாநிலத்தில் சம்பவம் நடந்த சரண் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு, மத்திய மனித வள அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், சத்துணவு தயாரிப்பதில் கவனம் செலுத்துமாறும், சுகாதாரமான உணவை குழந்தைகளுக்கு அளிப்பதை உறுதி செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இவ்வாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வந்த தகவல்களை பிகார் அரசு மறுத்துள்ளது. இதுவரை அதுபோன்ற எந்த செய்தியும் வரவில்லை என்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.