சுடச்சுட

    

    இந்தியன் முகாஜிதீனின் செய்தித் தொடர்பாளர் போல் ஷகீல் அகமது செயல்படுகிறார் : ஆர்.எஸ்.எஸ் விமர்சனம்

    By dn  |   Published on : 22nd July 2013 04:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரம்தான் இந்தியன் முகாஜிதீன் பயங்கரவாத இயக்கம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமதுவை ஆர்.எஸ்.எஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க சுற்றுப்பயணத்தையொட்டி அங்கு சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ்சின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் கூறியுள்ளதாவது:

    இந்தியன் முகாஜிதீனின் செய்தித் தொடர்பாளர் போல் ஷகீல் அகமது செயல்படுகிறார். அவரைப் போன்ற அனுதாபிகளால்தான் இந்தியாவில் பயங்கரவாதம் தழைத்தோங்குகிறது.பயங்கரவாதத்திற்கு ஷகீல் அகமது நியாயம் கற்பிப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் பாணிதான் இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது என்று ராம் மாதவ் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai