சுடச்சுட

    

    பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலிவுட் நடிகை ஜியா கான் நேற்று இரவு ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது வீட்டில் உள்ள வேலைக்காரர்கள், காவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    மேலும், ஜியா கான் தனது செல்பேசியில் கடைசியாக பேசிய நபரான சூரஜ் பஞ்சோலியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரஜ், நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஸரினா வஹப்பின் மகனாவார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai