சர்ச்சில் புகுந்து பணம் திருட்டு
By தன.திராவிட மணி | Published On : 14th June 2013 08:40 PM | Last Updated : 14th June 2013 08:40 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சர்ச்சில் புகுந்து பணம் திருடியவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகி்ன்றனர்.
பெருநாழியில் சி.எஸ்.ஐ. சர்ச் உள்ளது. இதன் பொறுப்பாளர் ஆக எடி மோகள் உள்ளார். இரவில் சர்ச் கதவுகளைப் பூட்டி விட்டு, வீட்டிற்கு எடி மோகன் போய் விட்டார்.அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சர்ச் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் மேஜை ஒன்றை உடைத்து உள்ளே இருந்த ரூ.3,000 பணத்தை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். சம்பவம் குறித்து பெருநாழி காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) ஆனந்தன். சார்பு ஆய்வாளர்க்ள் கிருஷ்ணன், பால சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் முகாமிட்டு குற்றவாளி கைரேகையைப் பதிவு செய்துள்ளார். குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.