மகனுக்கு கொலைமிரட்டல் விடுத்த தந்தை கைது
By அங்குபாபு | Published On : 14th June 2013 11:31 PM | Last Updated : 14th June 2013 11:31 PM | அ+அ அ- |

பழனி அருகே மகனை பிளேடால் கீறி கொலைமிரட்டல் விடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
பழனி அருகே கரிக்காரன்புதூர் அருவங்காட்டை சேர்ந்தவர் விசுவநாதன். இவரது மகன் சரத்குமார். கடந்த புதன்கிழமை திருமணம் ஒன்றிற்கு விசுவநாதன் மகள் மற்றும் குடும்பத்தார் செல்ல வேண்டி இருந்ததால் விசுவநாதனின் 7வயது பேத்தியை அவரிடம் விட்டு விட்டு சென்றனர். திரும்ப வந்து பார்த்த போது குழந்தையை காணாமல் தேட வேண்டி இருந்தது. இதுகுறித்து சரத்குமார் தந்தையை கடிந்து கொண்ட போது ஆத்திரமடைந்த விசுவநாதன் சரத்குமாரின் உடலில் பிளேடால் கீறி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மகன் கொடுத்த புகாரின் பேரில் விசுவநாதனை பழனி தாலுகா போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.