திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார்

தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன்(58) மாரடைப்பால் இன்று காலமானார். 
திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார்

தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன்(58) மாரடைப்பால் இன்று அவரது வீட்டில் காலமானார். 

சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று பகல் 12 மணி அளவில் வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து உயிரிழந்தார்.

மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் இயக்கி உள்ளார் .

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் இவரது சொந்த ஊர் ஆகும். பாரதிராஜாவிடம் 1979-ல் உதவி இயக்நனராக சேர்ந்தார். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓய்வதில்லை படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். அவர் 1982-ல் முதன்முதலில் இயக்கிய படம் கோபுரங்கள் சாய்வதில்லை.

இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக சத்யராஜை வைத்து அமைதிபடை 2-ம் பாகத்தை 'நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார்.  மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார்.ஆரம்பக் காலங்களில் திமுக அபிமானியாக இருந்த மணிவண்ணன், பின்னர் வைகோ மதிமுகவை தொடங்கியபோது அவருக்கு ஆதரவளித்தார். தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரான மணிவண்ணன், முள்ளிவாய்க்கால இறுதிபோருக்கு பின்னர், சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் முழங்கி வந்தார். மேலும் பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். அந்த மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும். நடிகர் சத்யராஜிடம் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார். இருவரும் இணைந்த அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில் மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது.

மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். இறுதி சடங்கு நாளை நடக்கிறது.   மணிவண்ணனின் மறைவுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர். நெசப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com