அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் காந்திசாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் காஞ்சி

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் காந்திசாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் காஞ்சி அமுதன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளைத் தமிழ் வழி வகுப்புகளாக மாற்ற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிற அவலத்தை போக்க வேண்டும். இந்த அவலத்தைப் போக்க தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழைக் கட்டாயப் மொழிப்பாடமாகவும், கட்டாய பயிற்று மொழியாகவும் இருக்கும்படித் தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை நிர்வாகி மா.செ. தமிழ்மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில பொதுச் செயலாளர் தீனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com