சுடச்சுட

  

  சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் சேவை அறிமுகம்

  By ஜெகதீஷ்  |   Published on : 18th June 2013 08:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஜூன் 22-ம் தேதியில் இருந்து தினசரி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது இணைப்பு ரயிலாக வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்:

  ரயில் எண் 16185: சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும். ரயில் எண் 16186: வேளாங்கண்ணியில் இருந்து சென்னை இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.இந்த ரயில் (ரயில் எண் 16185/16186 ) சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டு நாகப்பட்டினம் வரை இயக்கப்படும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், திருபாதிரிபுலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai