சுடச்சுட

  

  வங்கதேசத்தில், முக்கிய இஸ்லாமிய அரசியல் தலைவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்த வன்முறைச் செயல்களில் 42 பேர் பலியாகினர்.

  1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போர் நேரத்தில் கொலை மற்றும் பாலியல் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டக் குற்றத்துக்காக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் டெல்வார் ஹொசைன் சயீதீக்கு, அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவித்தது.

  இதையடுத்து, அக்கட்சியின் உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். காவல்நிலையங்கள், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டனர். வங்கதேசத்தின் பல பகுதிகள் போர்க்களம் போல காட்சியளிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai