கரூர் கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனைத் தொடக்கம்

கரூர் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி இன்று தொடங்கி வைத்தார்.

கரூர் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2 வாங்கினால் ஒன்று  இலவசம் என்ற சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி இன்று தொடங்கி வைத்தார். 

கரூர் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி முதல் வாடிக்கையாளருக்கு ஆடைகளை வழங்கி தொடக்கி வைத்தார்.  மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ரூ. 200-க்கும் மேல் மதிப்புள்ள பருத்தி மற்றும் பட்டு ரகங்களில் 2 பொருள்கள் வாங்கினால், ஒரு பொருள் இலவசமாக வழங்கப்படுகிறது.  தனியாக ஒரு பொருள் மட்டும் வாங்குபவர்களுக்கு 20 சத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்தத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையில் பட்டுப் புடவைகள், கோரா புடவைகள், காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பில், நேர்த்தியான கலர்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. படுக்கை விரிப்புகள், போர்வைகள், ஜமுக்காளம், திரைச்சீலைகள்,  சுடிதார், நைட்டிகள் முதலான ரகங்களும் உள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் கோ ஆப்டெக்ஸ் சேலம் மண்டலத்தின் விற்பனைக் குறியீடாக ரூ. 450  லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில் கரூர் விற்பனை நிலையத்தில் விற்பனைக் குறியீடாக ரூ. 15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  சிறப்பு விற்பனை அனைத்து ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களிலும் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com