தங்கம்: பவுனுக்கு ரூ.112 குறைவு
By | Published On : 08th March 2013 08:37 PM | Last Updated : 08th March 2013 08:37 PM | அ+அ அ- |

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 8) ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில நாள்களாகவே தங்கத்தின் விலையில் சிறிய அளவிலான ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக நாடு முழுவதும் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியது: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தங்கத்தின் மீது முதலீடு செய்யும் முதலீட்டாளர்களிடயே தெளிவற்ற நிலை காணப்படுகிறது.
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட பிறகு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. மார்ச் மாதம் வரை தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மையே நீடிக்கும் என்றனர்.
வெள்ளிக்கிழமை மார்க்கெட் நிலவரம்:
22 காரட் தங்கம்
ஒரு கிராம் - ரூ.2,755
ஒரு பவுன் - ரூ.22,040
ஒரு கிராம் வெள்ளி - ரூ.58.10
ஒரு கிலோ கட்டி வெள்ளி - ரூ.54,290
வியாழக்கிழமை மார்க்கெட் நிலவரம்:
22 காரட் தங்கம்
ஒரு கிராம் - ரூ.2,769
ஒரு பவுன் - ரூ.22,152
ஒரு கிராம் வெள்ளி - ரூ.58.60
ஒரு கிலோ கட்டி வெள்ளி - ரூ.54,750