மக்கள் நலப் பணியாளருக்கு மீண்டும் பணிவழங்கக் கோரி 3 நாள் உண்ணாவிரதப் போராட்டம்
By பாண்டியன் | Published On : 08th March 2013 05:20 PM | Last Updated : 08th March 2013 05:20 PM | அ+அ அ- |

பணிநீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அதன் மாநிலத் துணைச் செயலர் கூறினார்.
தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலர் செல்வக்குமார், விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது, இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, வரும் மார்ச் 19ம் தேதி, தமிழகத்தின் 5 இடங்களில், தொடர்ந்து 3 நாட்கள் இந்தப் போராட்டம் நடைபெறும். மதுரை, திருநெல்வேலி, கடலூர், திருவாரூர், உடுமலைப்பேட்டை ஆகிய 5 இடங்களில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.