சுடச்சுட

  
  ThillaiNayagam

  தமிழக நூலகத் துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் திங்கள்கிழமை கம்பம் நகரில் மாலை 4.30 மணி அளவில் தமது 88வது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

  சின்னமனூரில் 1925 ஜூன் 10ல் பிறந்த வே.தில்லைநாயகம், நூலகத் துறையில் விருப்பம் கொண்டு நூலகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். 1949ல் பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் ஆனார். 1962ல் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். 1972ல் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து 1982ல் ஓய்வு பெற்றார். ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயக்குநராக இருந்தவர் இவர் ஒருவரே. தேசிய, மாநில பல்கலைக்கழக நூலகக் குழுகள் பலவற்றிலும் உறுப்பினராக இருந்தவர்.

  நூல்கள் பல எழுதியுள்ளார். இவர் எழுதிய நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலியன தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை. "இந்திய நூலக இயக்கம்" என்ற நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. "இந்திய அரசமைப்பு" தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றது. இவரது குறிப்பேடு என்னும் நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டுநூல் (Year Book).

  இவருக்கு மனைவி கோமதியம்மாள், மகன் அருள்வேலன், மகள் அன்பரசி ஆகியோர் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய் காலை 10 மணிக்கு கம்பத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  தொடர்பு எண் : 04554 - 271597

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai