சுடச்சுட

    

    கோவை ஒண்டிப்புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் மார்க்(63). இந்த நிலையில் சி.எஸ்.ஐ. பெண்கள் ஐக்கிய சங்கத்தை சேர்ந்த பெண்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து, கிறிஸ்தவ ஆலயத்துக்கு முக்காடு போட்டுக் கொண்டு வரும் பெண்களிடம் முக்காடை நீக்கச்சொல்லி பாதிரியார் ஜான்மார்க் வற்புறுத்துகிறார் என்றும்,

    பெண்கள் ஐக்கிய சங்க கூட்டத்தில் பெண்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும். ஆனால் ஜான்மார்க் கூட்டத்துக்கு வந்து பெண்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக கிண்டலடித்து பேசுகிறார். எங்களை வெறிக்க வெறிக்க பார்ப்பதுடன் ஆபாச செய்கையும் செய்கிறார் என்றும்,மேலும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறும் அழைக்கிறார் என்றும் புகார் மனு அளித்தனர்.அதன் பேரில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ஜார்மார்க்கை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai