சுடச்சுட

  

  ஆலங்குளத்தில் டாஸ்மாக் கடை வருவதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

  By V.RAMACHANDRAN  |   Published on : 30th March 2013 07:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  alm30pal

  ஆலங்குளத்தில்,9 வது வார்டு பகுதியில்,மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில்,டாஸ்மாக் கடை வருவதை கண்டித்தும்,அதை உடன் நிறுத்த வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் பஸ்நிலையம் அருகில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை,9 வது வார்டு பகுதியான பஸ்நிலையம் பின் பகுதியில் மாற்றி அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.இப்பகுதி குடியிருப்பு அதிகம் நிறைந்த பகுதி.இப்பகுதியில் உள்ள சாலையை பீடி சுற்றும் பெண்களும்,பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும்,அரசு மருத்துவமனைக்கு செல்பவர்களும் அதிகளவில் பயன்படுத்துவர்.இப்பகுதியில் டாஸ்மாக் கடை வந்தால் அது பல்வேறு தரப்பினருக்கும் பெரிய அளவில் இடையூராக இருக்கும்.

  எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை வருவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி,அப்பகுதி மக்கள் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்ப்பாட்டத்திற்கு 9 வது வார்டு உறுப்பினர் ஏ.சொரிமுத்து தலைமை வகித்தார்.வட்டார காங்கிரஸ் பொதுச்செயலர் எம்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மு.பழனிசங்கர்,எம்.எஸ்.அருணாசலம், எஸ்.தங்கசெல்வம்,திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜே.ஜெபஸ்டின் ராஜ்குமார்,எம்.எஸ்.இளங்கோ,எஸ்.அன்பழகன்,எஸ்.ராமசாமி ஆகியோர் பேசினர்.

  10 வது வார்டு உறுப்பினர் ராமரத்தினம்,சமூக ஆர்வலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை ஆட்டோ உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.ரவிதாசன், செஞ்சிலுவைச்சங்க தலைவர் பொன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai