சுடச்சுட

  

  ஆலங்குடி குருப் பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  By THANGARAJU  |   Published on : 10th May 2013 04:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குருபக வான் கோயிலில் நடைபெறவுள்ள குருப் பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன்.

  ஆலங்குடி குரு கோயிலில் இன்று நடைபெற்ற குருப் பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:

  மே.28-ம் தேதி குருப் பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பணிகள், அடிப்படை வசதிகளை சம்பந் தப்பட்ட துறையினர் செய்துகொடுக்க வேண்டும்.

  இந்து அறநிலையத்துறை விழாவுக்கான ஏற்பாடுகளை விரைந்து செய்யவேண்டும். வருவாய்த்துறையினர் கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மருத்துவக் குழுவினர் தயாரக இருக்க வேண்டும். தீத்தடுப்பு வாகனங்கள் முன்னேற்பாடாக நிறுத்தி வைக்க வேண்டும்.

  திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி பிற இடங்களிலிருந்து பேருந்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில்  காவல்துறையினர் ஈடுபட வேண்டும். சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நடராசன்.

  கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் எஸ். சிவராமகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, திருவாரூர் கோட்டாட்சியர் சி. பொன்னம்மாள், மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், டிஎஸ்பி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கே ற்றனர்.

  14 கண்காணிப்புக்கேமராக்கள் கண்காணிப்பு: குருப் பெயர்ச்சி விழாவில் போக்குவரத்து மற்றும் கூட்டநெரிசல், திருட்டு நிகழ்வுகளைத்தடுக்கும் வகையில் கோயில் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்கப்படுகிறது. பின்னர் கோடை காலம் என்பதாலும், அக்னிநட்சத்திரம் வெயில் மக்களை கடுமையாக வாட்டி வருவ தாலும் கோயில் மற்றும் கோயிலைச் சுற்றி ஈரப்பதத்தை ஏற்படுத்தி அந்த இடத்தை குளிர்விக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai