சுடச்சுட

  

  உடன்குடி மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு

  By SELVAKUMAR.D  |   Published on : 10th May 2013 04:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் உடன்குடி மின்சார வாரிய அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

  தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள்,பொதுமக்கள் நலச்சங்க கூட்டம் உடன்குடி சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உடன்குடி ஒன்றிய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். கிளை தலைவர்கள் தாமோதரன், சுப்பிரமணியன், பகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  உடன்குடி மின்சார அலுவலகத்தில் பல முறைகேடுகள் நடப்பதாகவும், இது குறித்து விவாதிக்க மின்சார குறை தீர்க்கும் நாள் நடத்தக் கூறினால் மாவட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்பட்டது.

  விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க அதிகாரிகளிடம் கூறினால் அதற்கு அரசு உத்தரவு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இருமுனை,மும்முனை மின்சாரம் இரண்டும் சம அளவு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

  தமிழக அரசு விவசாயத்தில் தன்னிறைவு பெறவேண்டும் என்ற இலக்கோடு அதிக நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இது போன்ற செயல்களால் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படும்.

  ஆகவே உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உடன்குடி மின்வாரிய அலுவலகம் முன்பு ஆயிரம் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

  கூட்டத்தில் விவசாய சங்க கிளை நிர்வாகிகள் முருகேசன், கணேசன், பாண்டி ,திருமணி, அழகுவேல், வேல்சாமி, சுபாஷ், ராஜலிங்கம் ,பகவதிபாண்டி, லிங்கம், ஜெசியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai