சுடச்சுட

  

  கர்நாடக சட்டப்பேரவையில் 200க்கும் மேற்பட்ட கோடீஸ்வர எம்எல்ஏக்கள்

  By dn  |   Published on : 10th May 2013 04:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Karnataka

  2013ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 23.54 கோடி ரூபாயாகும்.

  கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற  எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரி வெறும் ரூ.10.02 கோடிதான்.

  தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 218 எம்எல்ஏக்களில் 203 பேர்  அதாவது 93 சதவீதத்தினர் கோடீஸ்வரர்கள் ஆவர்.

  கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்வானவர்களில்  218 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் ஆவர். 92 பேர் மீண்டும் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சொத்து மதிப்பு, கடந்த தேர்தலோடு ஒப்பிடும் போது தற்போது பல மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai