சுடச்சுட

    

    செம்பனார்கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 இளைஞர்கள் சாவு

    Published on : 10th May 2013 03:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம்,செம்பனார்கோயில் அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம்  மோதியதில் மொபெட்டில் சென்ற 2 இளைஞர்கள் சம்பவ  இடத்திலேயே இறந்தனர்.

    தரங்கம்பாடி வட்டம்,  பெரம்பூர் காவல்சரகம்   திருவிளையாட்டம்  அடுத்த பில்லவடந்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அழகேசன் மகன் அன்பரசன்(23),ராமர்  மகன்  ராபர்ட்(29).  நண்பர்களான இவர்கள் இருவரும்  வியாக்கிழமை இரவு  அரும்பாக்கம் கிராமத்திலிருந்து பில்லவடந்தைக்கு மொபெட்டில்  சென்றுள்ளனர்.

    திருவிளையாட்டம்- கடலி சாலையில் சென்றுக் கொண்டிருந்த எதிரே  வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபெட்டின் மீது மோதியது. இந்த விபத்தில்  அழகேசன் மற்றும் ராமர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர்.

    செய்தி அறிந்த பெரம்பூர் போலீஸார்  சம்பவ இடத்திற்குச் சென்று சாலையோரத்தில்  இறந்து  கிடந்தவர்களின்  சடலங்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

    விபத்துக் குறித்து பெரம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai