சுடச்சுட

  

  தெற்கு தில்லியில், 12ம் வகுப்பு மாணவி, அவளது வீட்டிலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

  முனிர்கா அருகே புத் விஹார் பகுதியில் வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவி பிங்கி (18)யின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர், அவளது அறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு, தான் மறைத்து எடுத்து வந்த துப்பாக்கியால், பிங்கியை சுட்டுக் கொன்றார்.

  அப்போது, பிங்கியின் அத்தை மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு ஓடி வந்த அவர், கொலை காரனைப் பிடிக்க முயன்றார். ஆனால், அவன் கண் இமைக்கும் நேரத்தில் ஓடி தப்பிவிட்டான். பிங்கி உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். ஆனால், பிங்கி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

  இது குறித்து கூறிய பிங்கியின் தந்தை, கொலை காரன் தனது தூரத்து உறவினராகத்தான் இருக்க வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக பிங்கியை பின்தொடர்ந்து வந்து திருமணம் செய்து கொள்ள தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான் என்றும் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai