சுடச்சுட

  

  நாகர்கோவிலில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

  By PAZHANIYA.PILLAI  |   Published on : 10th May 2013 03:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ngl10demo

  கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை ரத்து செய்யக்கோரி, நாகர்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இ.மரிய மிக்கேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சேவியர் தொடக்கி வைத்தார்.

    கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் கே.சசிகுமார், மூட்டா செயலாளர் நாகராஜன், பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் ராபர்ட் ஜேம்ஸ், கலையாசிரியர் கழக மாநிலத் தலைவர் விக்ரமன், மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லீடன்ஸ்டோன் ஆகியோர் பேசினர்.

   ஆர்ப்பாட்டத்தை துணை பொதுச் செயலாளர் சி. பாலசந்தர் முடித்து வைத்தார்.

   கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சியை ரத்து செய்து, பள்ளி வேலைநாட்களில்சிறப்பு பயிற்சி அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai