சுடச்சுட

    
    bansal

    ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமாக் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உறவினர் ரூ. 90 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் பவன் குமார் பன்சாலின் வீட்டில் வைத்து பேரம் நடந்ததாக சிபிஐ தரப்பு கூறிய பின்னர், பன்சால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து நெருக்குதல்கள் தரப்ப்பட்டன. இதனால் பிரதமர் மன்மோகன் சிங் பெரும் சிக்கலில் இருந்தார்.

    இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது பன்சால் விவகாரமாகப் பேசியதாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்று பவன் குமார் பன்சால் ரயில்வே அமைச்சக அலுவலகத்துக்கு வந்திருந்து  கோப்புகளைப் பார்வையிட்டார் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில், பவன் குமார் பன்சால் பதவி நீக்கம் செய்யப்படலாம்; அல்லது அவர் ராஜினாமா செய்யுமாறு பிரதமரால் கேட்டுக் கொள்ளப்படலாம் என்று பரவலாக தகவல் வெளியான நிலையில், பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன.

    மேலும், பன்சால் ராஜினாமா செய்யவேண்டும் என்று அவருக்கு நெருக்கடி தரப்பட்டதாகவும், இதை அடுத்து அவர் ராஜினாமா கடிதத்தை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai