சுடச்சுட

  

  கல்வீச்சுக்கு பயந்து பேருந்தில் ஹெல்மெட்டுடன் ஓட்டுநர்கள்

  Published on : 10th May 2013 03:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  drivers

  அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு கல்வீச்சில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை ஓட்டிச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி,ஜெ.குரு, ஆகியோர் கைது செய்யப்பட்டதையொட்டி ஜயங்கொண்டம் பகுதிகளில் பாமகவினர் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கி வருகின்றனர். இதனால் கடந்த பத்து நாட்களாக ஜயங்கொண்டம் பகுதியில் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.பேருந்துகள் சரியாக இயக்கப்படாததால் ஜயங்கொண்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் ஜயங்கொண்டத்திற்கு வராததால் நகர் முழுவதும் வெறிச்சோடிக்காணப்படுகின்றது. வியாபாரிகள் கடைகளை தினமும் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

   மேலும் அடிக்கடி பேருந்துகள் மீது கல் வீசி தாக்கப்படுவதால் ஓட்டுனர்கள் சிலர் காயமடைந்தனர். இதனால் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் ஜயங்கொண்டம் கிளையில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai