சுடச்சுட

  
  anbumani

  மரக்காணம் கலவரம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக ஆளுநரை சந்தித்த பாமக இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி மனு கொடுத்துள்ளார்.

  நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள அன்புமணி ராமதாஸ், சென்னையில் இன்று தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து மனு கொடுத்தார்.

  அதில், போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும்,  பாமகவினர் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், மரக்காணத்தில் நடந்த கலவரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai