சுடச்சுட

    
    ramadoss

    பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதை அடுத்து அவர் நாளை விடுதலையாவார் என்று கூறப்படுகிறது.

    கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஏற்கனவே இரண்டு வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில், இன்று மற்றொரு வழக்கிலும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்திருப்பதால், ராமதாஸ் நாளை சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai