சுடச்சுட

  

  வடமாநில பக்தர்கள் கோவில் ஊழியர்களிடையே மோதல்: மூவர் காயம்

  By RAMAKRISHNAN.T  |   Published on : 10th May 2013 03:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு வந்த வட இந்திய பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்களிடையே இன்று ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்தனர்.

   மகராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் ஒரு குழுவினராக கன்னியாகுமரி வந்தனர். இவர்கள் பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது தங்கள் காலணிகளை கோவிலுக்குச் செல்லும் வழியில் கழற்றி விட்டு கோவிலுக்குள் சென்றனராம்.

   திரும்பி வந்து பார்த்த போது காலணிகளை காணவில்லை. பக்தர்கள் செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த காலணிகளை கோவிலையொட்டிய காலணிகள் பாதுகாப்பு மையத்தில் கோவில் ஊழியர்கள் கொண்டு வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மகராஷ்டிர பக்தர்கள் கோவில் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

   சிறிது நேரத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் கோவில் ஊழியர்கள் காசிப்பழம், ஐயப்பன் மற்றும் தனியார் கடை ஊழியர் ரவி ஆகியோர் காயமடைந்தனர்.

   காயமடைந்தவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் மகராஷ்டிர மாநில பக்தர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai