சுடச்சுட

  
  siddaramaiah1

  கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமய்யா இன்று பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

  64 வயதாகும் சித்தராமய்யா, கர்நாடக மாநிலத்தின் 22வது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

  சித்தராமய்யா பதவியேற்றுக் கொள்வதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட வசதியாக, பதவியேற்பு விழா கண்டீரவா மைதானத்தில் நடத்தப்பட்டது. இதில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் வீரப்ப மொய்லி உள்ளிட்டோரும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai