மேல்படிப்பு படிப்புக்கு பணம் இல்லாமல் தவிக்கும் விவசாய கூலித் தொழிலாளி மகள்

விழுப்புரம் அருகே உள்ள நங்காத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வெற்றிச்செல்வி. இவர் அருகாமையில் உள்ள சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவர் பிளஸ் 2 தேர்வில்

விழுப்புரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மேல்படிப்பு சேருவதற்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

விழுப்புரம் அருகே உள்ள நங்காத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வெற்றிச்செல்வி. இவர் அருகாமையில் உள்ள சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவர் பிளஸ் 2 தேர்வில் 1056 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ்-182, ஆங்கிலம்-137, இயற்பியல்-192, வேதியியல்-183, உயிரியல்-185, கணிதம்-177 என மொத்தம் 1056 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவர் பொறியியல் படிக்க விரும்புகிறார். ஆனால் இவரது தந்தை விவசாய கூலித் தொழிலாளி. இவரது தாய் மஞ்சுளாவும் விவாசய கூலி வேலை செய்து வந்தார். கட்டட வேலை செல்லும்போது கழி முறிந்து தலையில் விழுந்ததில் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளார். தந்தை முருகனின் கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் இவர்கள் குடும்பத்தை நடத்துகின்றனர்.இதனால் அரசுப் பள்ளியில் படித்து 1056 மதிப்பெண்கள் பெற்றும் அவர் விரும்பும் பொறியியல் படிப்பை படிக்க முடியாத நிலையில் உள்ளார் வெற்றிச்செல்வி. இவர் படிப்புக்கு யாரேனும் உதவி செய்ய விரும்பினால் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு முகவரி: முதன்மை கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம். நீங்கள் கொடுக்கும் உதவி நேரடியாக அந்த மாணவியின் படிப்புச் செலவுக்கு வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் முனுவாசமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com