சுடச்சுட

  
  leenamaria

  ஜான் ஆப்ரகமின் மத்ரா கபே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த தென்னிந்திய நடிகை லீனா மரியா பால், தனது ஆண் நண்பருடன் தெற்கு தில்லியில் உள்ள பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்டார்.

  சென்னையில் பதிவான மோசடி வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த லீனா மரியா பால், தனது ஆண் நண்பருடன் பதுங்கியிருந்தபோது பிடிபட்டாராம். தில்லி மற்றும் சென்னை போலீஸார் இணைந்து மேற்கொண்ட இந்தத் தேடுதலின்போது, பதேர்புர்பெரி அருகே கேரி பகுதி பண்ணை வீட்டில் அவருடன் மூன்று முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட ஆறு பாதுகாப்பு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

  25 வயதாகும் லீனா மரியா பால், மோகன்லாலுடன் ரெட் சில்லிஸ் படத்தில் நடித்துள்ளார். அவரது நண்பர் பாலாஜி மற்றும் லீனா மீது மோசடிசெய்தல், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு சென்னையில் பதிவானது.

  அவர்கள் இருவரிடம்  இருந்தும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அவை ஹரியானா, ஜம்மு ஆகிய இடங்களில் இருந்து லைசன்ஸ் பெறப்பட்டவையாம். தில்லியில் இருந்து உரிமம் பெறப்படாதது என்பதால், அவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது ஆயுதச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai