சுடச்சுட

  

  இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று விசாகப்பட்டினத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. 288 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் 8 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

  மேற்கிந்திய தீவுகள் சார்பாக இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய சமி 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் 63 ரன் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

  இந்திய- மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.இதனையடுத்து பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. அணியில் அதிகபட்சமாக கோலி 99 ரன்கள்,தோனி 51 ரன்கள்,தவான் 35 ரன்களும் எடுத்தமை குறிப்பிடதக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai