Enable Javscript for better performance
முன்ஜாமீன் கோரி தருண் தேஜ்பால் மனு இன்று விசாரணை- Dinamani

சுடச்சுட

    
    tarun

    பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் தெஹல்கா பத்திரிகை முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

    உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிஸ்தானி முன்பு, மூத்த வழக்குரைஞர்கள் கே.டி.எஸ். துளசி, கீதா லூத்ரா ஆகியோர் ஆஜராகி, மனுவை உடனே விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    அதையடுத்து, மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அவர்களிடம் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.

    பெண் நிருபர் உள்பட 4 பேர் ராஜிநாமா: இந்நிலையில், தருண் தேஜ்பால் மீது பாலியல் தொந்தரவு குற்றம்சாட்டிய பெண் நிருபர் உள்பட அந்நிறுவனத்தில் பணியாற்றிய நான்கு பேர் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனர்.

    பெண் நிருபருக்கு ஆதரவாக ராஜிநாமா செய்துள்ள பத்திரிகையாளர்கள், "பாலியல் புகாரை தெஹல்கா நிறுவனம் கையாண்ட விதம் அதிருப்தி அளிக்கிறது. அதனால் ராஜிநாமா செய்கிறோம்' என்று சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

    மகளிர் ஆணையம் கண்டனம்: இதற்கிடையே, தெஹல்கா நிறுவன ஊழியர்கள் மூவரிடம் பெண் நிருபர் கூறிய தகவலைப் பதிவு செய்த கோவா போலீஸார், தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்தாமல் கோவா திரும்பியிருப்பதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், வழக்குரைஞருமான நிர்மலா சாமந்த் பிரபாவால்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேஜ்பால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன் பிறகும் அவரை கோவா போலீஸார் ஏன் கைது செய்யவில்லை? அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தாதது அதிர்ச்சியளிக்கிறது' என்றார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கோவா போலீஸ் உயரதிகாரி கூறுகையில், "பாலியல் விவகாரம் தொடர்பாக ஒரு குழு தில்லி சென்று விசாரித்துள்ளது.

    பெண் நிருபரின் வாக்குமூலத்தைப் பெற மற்றொரு குழு மும்பை செல்லவுள்ளது. அதன் பிறகு தருண் தேஜ்பால் விசாரணைக்கு அழைக்கப்படுவார்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai