அகதிகள் சிறப்பு முகாமில் 36 பேர் உண்ணாவிரதம்

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் மாவீரர்கள் தினத்தில் அஞ்சலி செய்ய ஈழத்தமிழ் அகதிகள்  உருவாக்கிய மாவீரர் சின்னத்தை தகர்த்தெரிந்த காவல்துறையின்  செயலை கண்டித்து

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் மாவீரர்கள் தினத்தில் அஞ்சலி செய்ய ஈழத்தமிழ் அகதிகள்  உருவாக்கிய மாவீரர் சின்னத்தை தகர்த்தெரிந்த காவல்துறையின்  செயலை கண்டித்து செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் புதன்கிழமை 36 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்டடுள்ளனர்.

கியூபிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மலேசியன், நைஜீரியர்கள், கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், ஈழத்தமிழர்கள் என 43 பேர் செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு  முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களை திறந்தவெளி முகாமிற்கு மாற்றக்கோரி அடிக்கடி உண்ணாவிரதப்போராட்டம், மரத்தில் ஏறியும், மதில் சுவற்றில் ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் இலங்கையில் உயிரிழந்தவர்களுக்காக நவ 27ம் தேதி மாவீரர் நாள் என அனுசரித்து அஞ்சலி செய்து வருகின்றனர். இந்த நவ 27ல் மாவீரர் தினத்தை அனுசரித்து அஞ்சலி செலுத்துவதற்காக அகதிகள் சிறப்பு முகாமில் மாவீரர் நினைவு சின்னத்தை உருவாக்கி கொடியேற்றி அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் நினைவு மண்டப அமைப்பையும்  ஈழத்தமிழ் அகதிகள்  செவ்வாய்க்கிழமை இரவு  உருவாக்கினர்.

தகவலறிந்த கியூபிரிவு போலீஸார் மற்றும் செங்கல்பட்டு டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், எஸ்ஐ சங்கர், சிறப்பு எஸ்ஐக்கள் மற்றும் காவல்துறையினர், செங்கல்பட்டு வட்டாட்சியர் ரவி, துரைராஜ், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட   வருவாய்த்துறையினர்  ஈழத்தமிழர்கள் உருவாக்கிய மாவீரர் நாள் நினைவு மண்டபத்தை இடித்து இரவோடு இரவாக தகர்த்தெரிந்தனர்.

இதனால் ஈழத்தமிழர்கள் தங்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தியதாகவும், இதனால் தங்களது மனம் புண்படுத்தபட்டுவிட்டதாவும், மாவீரர் நினைவு தினத்தை அனுசரித்து அஞ்சலி செய்ய விடாமல் தங்கள் மனதை  காயப்படுத்திய கியூபிரிவு போலீஸôர் மற்றும் காவல்துறையினரை கண்டித்து  முகாமில் தங்கியுள்ளவர்களில் 36 பேர் புதன்கிழமை காலையில் இருந்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயல்பாட்டிற்கு காரணம் மலேசியன் தான் தாங்கள் உருவாக்கிய நினைவு மண்டபத்தை படம்பிடித்து கியூபிரிவிற்கு  அனுப்பி தலைவர்களுக்காக விழா எடுப்பதாக தகவல் கொடுத்தார். அதனால் காவல்துறையினர் அவரை மட்டும் வெளியே அழைத்து சென்றுவிட்டனர.மீதமுள்ள 6 பேர் நைஜீரியன் மற்றும் முஸ்லிம்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இருந்தபோதிலும் எங்களின் உணர்வுகளை மதிப்பளிக்காமல் செயல் பட்ட காவல்துறையினரை கண்டித்து தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ஈழத்தமிழர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com