சுடச்சுட

  

  மோடியின் கழிவறை குறித்த கருத்து: பாஜகவின் இரட்டை வேடம் என காங். விமர்சனம்

  Published on : 03rd October 2013 03:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று புது தில்லியில் நடைபெற்ற இளைஞர்களின் கூட்டத்தில் பேசியபோது, ”பெஹலே சௌசால்ய, ஃபிர் தேவாலய” என்று, முதலில் நான் கழிப்பறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன், பின்னரே கோவில்களுக்கு என்று கூறியிருந்தார். மேலும், ஒரு இந்துத்துவ பின்னணியில் வந்த தலைவர் என்ற காரணத்தால், என் மீதான மக்களின் பார்வை இவ்வாறு என்னை சொல்லத் தூண்டாதுதான், இருப்பினும், நான் இதனை தைரியமாகச் சொல்கிறேன் என்று கூறியிருந்தார்.

  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். அப்போது, பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், நரேந்திர மோடியின் கருத்துக்கு பாஜக எதுவும் கூறாமல் இருப்பது அதன் இரட்டை நிலையைக் காட்டுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலர் திக் விஜய் சிங், இது குறித்துக் கூறியபோது, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் எல்லாம் இப்போது எங்கே போயின என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai