தெலங்கானா : 19 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது அமைச்சர்கள் குழு
By | Published On : 11th October 2013 02:56 PM | Last Updated : 11th October 2013 02:56 PM | அ+அ அ- |

தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் இன்று புது தில்லியில் நடைபெற்றது. மத்திய உள்ளதுறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக அடிப்படை விஷங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். இருதரப்பிலும் உள்ள நியாயங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து விவாதம் நடந்ததாகவும், தெலங்கானா அமைப்பது தொடர்பாக குழுவிற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஏகே அந்தோணி மற்றும் ப,சிதம்பரம் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி மீண்டும் தெலங்கானா அமைச்சர்கள் குழு கூடுகிறது.