சுடச்சுட

  

  ஸ்ரீநடராஜர் கோயிலில் "நாதனும், நாதமும்" வீடியோ குறுந்தகடு வெளியீடு!

  By ஜி.சுந்தரராஜன்  |   Published on : 12th October 2013 03:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  natarajar

  சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சென்னை நந்தகுமார் அறக்கட்டளை சார்பில் தயாரிக்கப்பட்ட ஆச்சாள்புரம் சின்னதம்பி குழுவினரின் 'சிவாலய வழிபாட்டில் நாகஸ்வர இதை மரபு' குறித்த தொகுப்பு காட்சியான "நாதனும், நாதமும்" என்ற வீடியோ குறுந்தகடு வெளியீட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  விழாவிற்கு கிருஷ்ணசாமி தீட்சிதர் தலைமை வகித்துப் பேசினார். சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் குறுந்தகட்டை வெளியிட்டார். முதல் குறுத்தகட்டை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன் பெற்றுக்கொண்டார். இசையறிஞர் பி.எம்.சுந்தரம் அறிமுகவுரையாற்றினார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் வாழ்த்துரையாற்றினார். விழாவில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிர்வாகிகள் ஜி.வி.பாலதண்டாயுதம் பிள்ளை, டாக்டர் எஸ்.செல்வமுத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai