வாக்காளர் பட்டியலில் திருத்தம்: 1913-ல் தொடர்பு கொள்ளலாம்
By | Published On : 18th October 2013 09:00 PM | Last Updated : 18th October 2013 09:00 PM | அ+அ அ- |

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விளக்கங்களை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் சரி பார்க்கவும், பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.மேலும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் போன்றவை தொடர்பான விளக்கங்களை பெற சென்னை மாவட்ட தேர்தல் அலுவலத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறையில் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.