கதிர்வீச்சு அச்சம் : மீன் உணவு சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்
By dn | Published On : 23rd October 2013 12:40 PM | Last Updated : 23rd October 2013 12:40 PM | அ+அ அ- |

ஜப்பானில் அணு உலை விபத்துக்குப் பிறகு கதிர்வீச்சு அச்சத்தால் மீன் உணவு சாப்பிடுவதை அந்நாட்டு மக்கள் தவிர்த்து வந்தனர்.
இந்த நிலையில், அணு உலை வெடித்த புகுஷிமாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அந்நாட்டு பிரதமர் ஜின்ஜோஅபே, பொதுமக்கள் முன்னிலையில் பல்வேறு மீன் உணவுகளை சாப்பிட்டு காட்டினார்.
மேலும், பொது மக்கள் முன்னிலையில், மீன் உணவு நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது என பிரச்சாரமும் செய்தார்.