சுடச்சுட

    

    காங். தலைவர் சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

    By dn  |   Published on : 04th September 2013 05:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில் தனது கட்சியினரை காப்பாற்ற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு சம்மன் அனுப்பி உள்ளது.

    கடந்த 1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக கூறி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு  குற்றம் சாட்டி உள்ளது. வழக்கினை விசாரித்த நீதிபதி ‌சோனியவிற்கு சம்மன் அனுப்பி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai