சுடச்சுட

  
  modispeeech

  பாஜகவின் இளைஞர் அணி சார்பில் நடைபெறும் இளந்தாமரை மாநாடு திருச்சியில் ஜி. கார்னர் மைதானத்தில் வியாழக்கிழமை மாலை துவங்கியது. மாநாட்டில், பாஜக இளைஞர் அணி செயலர் அனுராக் தாக்கூர்  துவக்க உரை ஆற்றினார்.

  அவரது உரையைத் தொடர்ந்து பாஜக மாநில நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர்.

  இந்த மாநாட்டில், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூட்டத்தில் உரையாற்றினார்.

  தாய்மார்களே பெரியோர்களே என்று தமிழில் தனது பேச்சைத் தொடங்கினார் மோடி. வாலி சிங்கங்களே என்றார் மோடி. வாலிப என்று திருத்திக் கொடுத்தார் ராஜா.

  தமிழ்நாடு பெருமை உடைய நாடு. கம்பன் வள்ளுவர் பிறந்த பூமி. தமிழ்நாடு என்று சொன்னால், காதில் தேன் வந்து பாயும் என்று பாடினார் பாரதியார். திருச்சி தமிழ்நாட்டின் இதயம் போல் மத்தியில் இருக்கும் மாவட்டம். மலைக்கோட்டையும் காவிரியும் அலங்கரிக்கும் மாவட்டம் சோழர் தலைநகராக உறையூர் இருந்தது திருச்சி. இந்த நகரில் வசிக்கும் மற்றும் இங்கு வந்துள்ளவர்கள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம் என்றார் தமிழிலேயே பேசத் தொடங்கிய மோடி.

  ராமலிங்கம் பிள்ளை சொல்லியிருக்கிறார்... தமிழர் என்றோர் இனம் உண்டு. தனியே அவர்க்கோர் குணம் உண்டு என்றார்.. தமிழகத்தில் உரையாற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன்; தமிழர்கள் கடின உழைப்பாளிகள், புத்திசாலிகள், மற்றவரை மதிப்பவர்கள் என்றெல்லாம் கூறினார். இதனிடையே மோடியின் பேச்சை தமிழாக்கம் செய்து வந்த ராஜா, தரணியில் அவர்க்கோர் குணம் உண்டு என்று மொழியாக்கிச் சொல்லி சொதப்பினார்.

  மோடியின் பேச்சில் சில துளிகள்...

  * உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் செம்மையான மொழி தமிழ். சங்க இலக்கியங்களைக் குறித்து அறிவதில் எனக்கு ஆர்வம் உண்டு.

  * இமெயிலைக் கண்டுபிடித்தவர் தமிழர்.

  * காந்தி தண்டி யாத்திரை தொடங்கியபோது, இங்கே திருச்சியில் இருந்துதான் வேதாரண்யம் உப்பு யாத்திரையும் தொடங்கியது. அதற்காக திருச்சியும் நாடும் பெருமிதப்படும் விஷயம் இது.

  * போரை விட பயங்கரவாதிகளின் கையால் இறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகம். இதை அறியும்போது எனக்கு கோபம் வருகிறது.

  * பாகிஸ்தான் படை இந்திய மண்ணை ஆக்கிரமிக்க என்ன காரணம்?

  * நமது ராணுவ வீரர்களைப் பாதுகாக்க தில்லி அரசு  தவறிவிட்டது.

  * நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ...அனைவரும் ஒரே குரலில் பதிலளிக்க வேண்டும். பாகிஸ்தான் தக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போது பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்து கிறோம் என்று இந்தியாவில் இருந்து பிரதமர் உள்ளிட்டோர் சென்று விருந்து உண்கிறார்கள். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நீங்கள் சொல்லுங்கள்... இது சரியா?

  மீண்டும் ஒரு முறை பதில் சொல்லுங்கள். இது சரியா என்று கேட்டார் மோடி. அதற்கு பார்வையாளர்கள் மத்தியில் இருந்து தவறு என்று பதில் வந்தது.

  இவ்வாறு தவறு என்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே...  நான் சொல்லவில்லை; பாஜக சொல்லவில்லை... உங்களிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கிற தமிழர்கள் சொல்கிறார்கள்... தமிழக இளைஞர்கள் சொல்கிறார்கள்....

  ஒரு நாட்டுக்கு ஆத்ம கவுரவம் மிக முக்கியம். அமெரிக்காவில் உளவுத் துறையில் பணியாற்றிய ஸ்னோடன் அமெரிக்காவின் சில ராணுவ ரகசியங்களை வெளியிட்டார். அவரைக் கைது செய்ய அமெரிக்கா முனைந்தபோது, ஸ்னோடென் தப்பி ரஷியாவில் சரண் அடைந்தார். அவருக்கு ரஷ்யா புகலிடம் தந்தது. எனவே, அமெரிக்க அதிபர் ரஷ்யாவில் கால் வைக்க மாட்டேன் என்றார். எந்த ஒரு சிறிய நாட்டுக்கும் சுய கவுரவம் என்பது மிக முக்கியம். நாம் அதனைப் படிக்க வேண்டாமா?- என்று கேள்வி எழுப்பினார் மோடி.

  இந்திய அரசின் ஆதார் அட்டை  குறித்து, உச்ச நீதிமன்றத்தில் அரசு குட்டு வைத்தது என்றார்.

  ஆதார் அட்டை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது. உச்ச நீதிமன்றதில் அப்படி ஓரு தீர்ப்பு வந்தது.

  மத்திய அரசின் தலையில் குட்டியது போன்று அமைந்தது அந்தத் தீர்ப்பு. ஆதார் அட்டை கிடைத்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்று கூறியது மத்திய அரசு.

  ஆதார் அட்டை விஷயத்தில் எவ்வளவு பணம் செலவு செய்தது என்று அரசை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது. இதன்மூலம் பலன் பெற்றவர்கள் யார் என்று கேள்வி கேட்டது உச்ச நீதிமன்றம். இதையேதான் நான் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் பிரதமரிடம் கேட்டேன்.

  இதனை முதன் முதலாக நான் உங்கள் முன் வைக்கிறேன்.

  குஜராத் எல்லை மாநிலம். பயங்கரவாதிகள் தாங்கள் உள்ளே புகுந்து, ஆதார் அட்டை பெற்றுக் கொண்டு அனைத்து வித சலுகைகளையும் பெறுவார்களே என்று கேட்டேன். அப்போது, தேசிய பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டுங்கள். இது குறித்து மாநில முதல்வர்களிடம் பேசுங்கள். கருத்து கேளுங்கள்... என்றேன். நீங்கள் இப்போது சிந்தித்துக் கொண்டிருப்பது போல் நான் அப்போது கேட்டேன். இது குறித்து பிரதமரிடம் நான் கம்பீரமாக சவால் விட்டேன். இன்று அதே விஷயத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் தலையில் குட்டியுள்ளது என்றார் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai