விலங்களுக்கிடையே நடத்தப்படும் சண்டைகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த இ.சேஷன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவிவரம்: தமிழகத்தின் பல மாவட்டங்களில் சேவல் சண்டைகள் நடத்தப்படுகின்றன. அதில், ஆயுதங்கள் இல்லாமலும், ஆயுதங்களோடும் கூடிய சண்டைகள் என இரண்டு விதமான சண்டைகள் நடத்தப்படுகின்றன.
ஆயுத சண்டையில் சேவல்களின் கால்களில் கத்திகள் கட்டப்படுகின்றன. இதனால், சேவல்களுக்கு காயங்கள் ஏற்படுகின்றன. இதில், சில சேவல்கள் இறக்கின்றன. சில நேரங்களில், எதிர் சேவலை கொலை செய்வதற்காக சேவல்கள் கால்களில் கட்டப்படும் கத்திகளில் விஷங்கள் தடவப்படுகின்றன. இதன் மூலம் மனிதர்களுக்கும் காயங்கள் ஏற்படுகின்றன.
இது தவிர, சில மாவட்டங்களில் ஆடுகளுக்கிடையே சண்டை நடத்துகின்றனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த சண்டை நடத்தப்படுகின்றன. இந்த சண்டைகளின் முடிவில் விலங்குகள் பலத்த காயங்கள் அடைகின்றன.
இந்த சண்டைகள் திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் போன்ற சமயங்களில் நடத்தப்படுகின்றன. இந்த சண்டைகள் விலங்கள் கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானதும், தடை செய்யக் கூடியதும் ஆகும்.
மேலும், சூதாட்டத்துக்காகவும் விலங்கள் சண்டை நடத்தப்படுகிறது. இது போன்ற சண்டைகளின் போது விலங்குகள் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறுகின்றனர். எனவே, விலங்கள் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி, அது போன்ற சண்டைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (ஏப்.4) விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவி்ட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு முகநூலில் தொல்லை: பெங்களூரு மென்பொறியாளா் கைது

இளைஞா் மீது தாக்குதல்: உறவினா்கள் சாலை மறியல்

100-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய படுகா் இன மூதாட்டி!

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிகர லாபம் ரூ. 918 கோடியாகச் சரிவு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


