மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மலேசியாவில் கணவர் மாயம்: கண்டுபிடித்துத் தரக் கோரி மனைவி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மலேசியாவில் 18 மாதங்களுக்கு முன்பு மாயமான தனது கணவரை கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்ரத்தில மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில்

Updated On :18 ஜூன் 2014, 8:43 pm IST

மலேசியாவில் 18 மாதங்களுக்கு முன்பு மாயமான தனது கணவரை கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்ரத்தில மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த என்.தெய்வானை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு

என்னுடைய கணவர் எம்.நல்லதம்பி, அவரது நண்பர் செய்யது முகமதுவைப் பார்க்க அடிக்கடி மலேசியா செல்வார்.இதே போன்று கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியா சென்றிருந்தார். அப்போது, அதே மாதம் 12-ஆம் தேதி மலேசியா விமான நிலையத்துக்கு  எனது கணவரும், செய்யது முகமதுவும் காரில் வந்துள்ளனர்.ஆனால், அவர்கள் இருவரும் அன்றைய தினம் காணாமல் சென்றனர். இது தொடர்பாக செய்யது முகமதுவின் மனைவி, எனது கணவரும் நல்லதம்பியும் காணவில்லை என மலேயசியன் தூதரகத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் காணாமல் போன கார் 19-ஆம் தேதி விமான நிலையம் அருகே கண்டறியப்பட்டது. அதில் எனது கணவர் இல்லை. இதுவரை அவரை கண்டுபிடிக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் இதுவரை தெரியவரவில்லை.எனது கணவர் மாயமாகி 18 மாதங்கள் கடந்துவிட்டன. இது தொடர்பாக மலேசிய தூதரகம், இந்தியத் தூதகரம், இந்திய வெளியுறவுத் துறை ஆகியோரிடம் பல்வேறு புகார் அளித்துட்டேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கணவர் மாயமானதிலிருந்து நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை.

எனவே, மலேசியாவில் மாயமான எனது கணவரை கண்டுபிடித்துத் தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு புதன்கிழமை (ஜூன் 18) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை, மலேசியன் உயர் ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.