மலேசியாவில் 18 மாதங்களுக்கு முன்பு மாயமான தனது கணவரை கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்ரத்தில மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த என்.தெய்வானை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு
என்னுடைய கணவர் எம்.நல்லதம்பி, அவரது நண்பர் செய்யது முகமதுவைப் பார்க்க அடிக்கடி மலேசியா செல்வார்.இதே போன்று கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியா சென்றிருந்தார். அப்போது, அதே மாதம் 12-ஆம் தேதி மலேசியா விமான நிலையத்துக்கு எனது கணவரும், செய்யது முகமதுவும் காரில் வந்துள்ளனர்.ஆனால், அவர்கள் இருவரும் அன்றைய தினம் காணாமல் சென்றனர். இது தொடர்பாக செய்யது முகமதுவின் மனைவி, எனது கணவரும் நல்லதம்பியும் காணவில்லை என மலேயசியன் தூதரகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் காணாமல் போன கார் 19-ஆம் தேதி விமான நிலையம் அருகே கண்டறியப்பட்டது. அதில் எனது கணவர் இல்லை. இதுவரை அவரை கண்டுபிடிக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் இதுவரை தெரியவரவில்லை.எனது கணவர் மாயமாகி 18 மாதங்கள் கடந்துவிட்டன. இது தொடர்பாக மலேசிய தூதரகம், இந்தியத் தூதகரம், இந்திய வெளியுறவுத் துறை ஆகியோரிடம் பல்வேறு புகார் அளித்துட்டேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கணவர் மாயமானதிலிருந்து நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை.
எனவே, மலேசியாவில் மாயமான எனது கணவரை கண்டுபிடித்துத் தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு புதன்கிழமை (ஜூன் 18) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை, மலேசியன் உயர் ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிளிஞ்சல்கள் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி பலி!

மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு தொல்லை: மென்பொறியாளா் கைது!
உ.பி.யில் கல்லூரி மாணவிக்கு காஃபியில் மயக்க மருந்து கலந்தளித்து 3 நாள்கள் வீட்டில் பூட்டி பாலியல் வன்கொடுமை!

திருச்செங்கோட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் அருண்ராஜ் ஆலோசனை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


