திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வீடியோ கான்பிரசிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இக்கோவிலில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், பக்தர்கள் வசதிக்காக நாழிக்கிணறு செல்லும் வழியில் ரு. 54 லட்சம் செலவில் நவீன முடிகாணிக்கை மண்டபமும், ரூ. 59 லட்சம் செலவில் மூவர் சமாது எதிர்புறம் 24 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களை சென்னையிலிருந்தவாறே, முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பிரசிங் முறையில் வியாழக்கிழமையன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அவ்விரு கட்டடங்களையும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) இரா.ஞானசேகர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி ஆணையர் க.செல்லத்துரை, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், கண்காணிப்பாளர் கோமதி, விடுதி மேலாளர் அ.சிவநாதன், உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், திருச்செந்தூர் பேரூராட்சித்தலைவர் மு.சுரேஷ்பாபு, ஊராட்சி ஒன்றியத்தலைவர் லி.ஹேமலதா லிங்ககுமார், துணைத்தலைவர் சண்முகசுந்தரம், திருச்செந்தூர் ஒன்றிய அ.தி.முக. செயலர் அமலி டி.ராஜன், நகரச்செயலர் வி.எம்.மகேந்திரன், கோவில் பணியாளர்கள் வெங்கடேசன், குமார், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.