திருச்சியில் வியாழக்கிழமை போலீஸ் ஏட்டு வழக்கில் சாட்சிக்கு வந்த வந்த ஒருவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
திருச்சி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஒரு பெட்ரோல் பங்கு முன்பு வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் தாக்கினர்.
இதனால் அலறிக்கொண்டு ஓடிய அந்த நபரை அவ்வழியாக வந்த போலீஸார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் போலீஸாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கப்பட்ட அந்த நபர் உறையூர் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (34) என்பதும், இவர் போலீஸ் ஏட்டு வழக்கில் சாட்சிக்கு வந்தவர் என்பது தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.