9ஆம் வகுப்பு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 9ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சாவில் மர்ம உள்ளதாக கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தில்
Published on
Updated on
1 min read

தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 9ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சாவில் மர்ம உள்ளதாக கூறி உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்துள்ள சுரைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் விஷ்ணு(14). கடந்த கல்வியாண்டு வரை தருமத்துப்பட்டியில் படித்து வந்த விஷ்ணு, நிகழாண்டில் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். கடந்த சனி, ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மீண்டும் திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த அவர், சக மாணவர்களோடு விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை உடன் தங்கியிருந்த மாணவர்கள் குளிக்கச் சென்ற போது, மாணவர் விஷ்ணு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொறுப்பு) பி.ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் மாலாமணிமேகலை, நகர காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரன், காவல் ஆய்வாளர்கள் இளங்கோவன் ஜென்னீஸ், கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவர் விஷ்ணுவின் உடல், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே மருத்துவமனைக்கு வந்த மாணவரின் உறவினர்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பிரேத பரிசோதனை நடத்துவதற்கு எதி்ர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com