ஆசாராம் பாபுவுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டிய அளவுக்கு உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என்பதால், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இடைக்கால ஜாமீன் வழங்குமாறு தன்னைத் தானே சாமி என்று அழைத்துக் கொண்ட ஆசாராம் பாபு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.